பொது செய்தி

தமிழ்நாடு

புதர் மண்டி கிடக்கும் நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா?

Added : நவ 29, 2019
Advertisement

மங்கலம்பேட்டை : மாத்துார் கிராமத்தில் புதர் மண்டி கிடக்கும், நுாலகத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்கலம்பேட்டை அடுத்த மாத்துார் ஊராட்சியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நுாலகம் திறக்கப்பட்டது.ஒரு சில மாதங்களே பயன்பாட்டில் இருந்த நுாலகம், எவ்வித அறிவிப்புமின்றி பூட்டப்பட்டது. இதனால் மாணவர்கள் பொது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், விலைமதிப்பில்லாத புத்தகங்கள் பாழாகி வருகின்றன.நுாலகம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால், வளாகத்தினுள் புதர் மண்டி உள்ளது. எனவே, கிராம மாணவர்கள் நலன் கருதி, புதர் மண்டி கிடக்கும் நுாலகத்தினை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X