பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம்

Added : நவ 29, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : 'உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு நாம் சிறப்பாக பணயாற்ற வேண்டும்' என பா.ம.க., மாநில தலைவர் மணி ஆலோசனை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க., சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாநில துணைப் பொதுச் செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் பாலசக்தி முன்னிலை வகித்தார். செயலர் சரவணன் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் வடிவேலன் வாழ்த்திப் பேசினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் மாநில தலைவர் மணி பேசுகையில், 'ராமதாஸ் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை பிரித்த தமிழக அரசுக்கு நன்றி. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் முழுவதையும் விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வரும் ஜனவரி 4ம் தேதி பூம்புகாரில் நடக்கும் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பெரும் திரளான உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் நமது கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்' என்றார்மாநில இளைஞரணி துணைச் செயலர் தமிழரசன், மாநில மகளிரணி தலைவர் நிர்மலா, துணை செயலர்கள் காசாம்பு பூமாலை, சிலம்பு செல்வி, செல்வி செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். நகர தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X