பொது செய்தி

தமிழ்நாடு

ஜே.எஸ்., குளோபல் அகாடமி பள்ளி

Added : நவ 29, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமியில் வேளாண்மை சுற்றுலா களப்பயணத்தில் மாணவர்கள் விளைநிலத்தில் நாற்று நட்டனர்.கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த களப்பயணத்திற்கு முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஜீவிதா, ஆனந்த் முன்னிலை வகித்தனர்.

சுற்றுலாவையொட்டி பள்ளியில் 5 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை விளைநிலத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் விளைநிலத்தை உழும் முறை மற்றும் நாற்று நடும் முறை, நெல் பராமரிப்பு மற்றும் அறுவடை செய்தல் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.தொடர்ந்து மாணவர்கள் விளைநிலத்தில் நாற்று நட்டனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சண்முகபிரியா, ஹேமச்சந்திரன், பரத், லியோபால், திருமலை, விமல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X