உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சார்பு நீதிமன்ற நீதிபதி அழகேசன் தலைமை தாங்கி நிலவேம்பு கஷாயத்தை வழங்கி துவக்கி வைத்தார். உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரீனா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்கலா முன்னிலை வகித்தனர்.உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் நளினி, நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலு வரவேற்றார்.நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் சங்க செயலர் சந்திரசேகரன், பொருளாளர் ஜெகநாத், துணைத் தலைவர் வெங்கடேசன், அரசு வழக்கறிஞர்கள் அன்புச்செல்வன், கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் சவுந்தர்ராஜன், வேதகிரி, ராஜகோபால், மோகன்ராஜ், கிருபாபுரி உட்பட பலர் பங்கேற்றனர்.வட்ட சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் கமலா, சட்ட தன்னார்வலர்கள் உமாசங்கரி, வினோத்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.