பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் துவங்கியது

Added : நவ 29, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் துவங்கியதற்காக நேர்த்திக்கடனாக பிரபு எம்.எல்.ஏ., சிவன் கோவிலுக்கு பசு தானம் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த 26ம் தேதி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்டம் துவங்கிட வேண்டும் என்ற தனது வேண்டுகோள் நிறைவேறியதற்காகவும்; மழை பெய்ய வேண்டியும், கள்ளக்குறிச்சி மாவட்டம் துரித வளர்ச்சி காண வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டு பிரபு எம்.எல்.ஏ., சாமியார் மடம் செம்பொற்ஜோதி நாதர் கோவிலுக்கு காங்கேயம் சினைப் பசுவை தானமாக வழங்கினார்.

கோவில் நிர்வாகி நாச்சியப்பன் பசு மாட்டிற்கு மஞ்சள் கலந்த நீரினால் நீராட்டி, ருத்ராட்ச மாலை, பட்டு வஸ்திரம் அணிவித்து பாத பூஜை செய்து, சிறப்பு வழிபாடுகள் நடத்தி பசுவை கோவில் நடைக்குள் கொண்டு சென்றார்.நிகழ்ச்சியில் தியாகதுருகம் ஒன்றிய செயலர் அய்யப்பா, நகர செயலர் ஷியாம்சுந்தர், நகர நிர்வாகி வேல்நம்பி, முன்னாள் ஒன்றிய நகர இணைச் செயலர் ஜெயசங்கர் ஆனந்தவள்ளி, பாசறை செயலர் மகாலிங்கம், எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலர் சின்னதுரை, ஊராட்சி செயலர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X