பொது செய்தி

தமிழ்நாடு

விஸ்வகர்ம முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செயற்குழு கூட்டம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
சிதம்பரம் : தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் சிதம்பரம் மந்தக்கரை காமாட்சியம்மன் கோவிலில் நடந்தது.சங்க மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். நிர்வாகிகள் சின்னப்பா, பாஸ்கர், தியாகராஜன், இளைஞர் அணி ரமேஷ், பாவாடை பத்தர், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வாழக்கொல்லை கிளை சங்க தலைவராக

சிதம்பரம் : தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் சிதம்பரம் மந்தக்கரை காமாட்சியம்மன் கோவிலில் நடந்தது.

சங்க மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். நிர்வாகிகள் சின்னப்பா, பாஸ்கர், தியாகராஜன், இளைஞர் அணி ரமேஷ், பாவாடை பத்தர், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வாழக்கொல்லை கிளை சங்க தலைவராக கார்த்திகேயன், செயலராக கார்த்திகேயன், பொருளாளராக சிவா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வரும் 15ம் தேதி நடக்கும் அகில இந்திய நகை தொழிலாளர்கள் தேசிய செயற்குழுவில் மாநில தலைவர் சேகர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பது. வங்கியில் முத்ரா திட்டத்தில் பெறப்பட்ட தொழில் கடன்களை நிலுவை இல்லாமல் செலுத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X