நிலவேம்பு கஷாயம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Added : நவ 29, 2019

திண்டிவனம் : திண்டிவனம் ஜோசப் பள்ளி மாணவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியை, பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி மாசில்லா மேரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்க தலைவர் பாபு, செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் சுரேஷ், மாவட்ட தலைவர்கள் பாலாஜி வெங்கடேசன், தர்மசிவம், கோதை பாலாஜி, பாஸ்கர், நிர்வாகிகள் வில்லரசன், செந்தில்குமார், கார்த்தி ராஜா, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X