திண்டிவனம் : மாவட்ட அளவில் நடந்த யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கான யோகா போட்டி நடந்தது. விழுப்புரத்தில் நடந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.போட்டியில், எண்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர் கீர்த்திவாசன் முதலிடம் பிடித்து, சான்றிதழ் மற்றும் பரிசு பெற்றார். மாணவருக்கு, பள்ளி சார்பில் பள்ளி தலைமையாசிரியை மைதிலி மற்றும் ஆசிரியர்கள், ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர்.