நெட்டப்பாக்கம் : பனையடிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த பனையடிக்குப்பத்தில் முத்துமாரியம்மன் கோவில் புதியதாக கட்டப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி, கடந்த 26ம் தேதி மாலை 5.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக ஹோமம், முதல்கால யாக பூஜைகள் நடந்தது.நேற்று காலை 7.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, கோமாதா பூஜை, 8.30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முத்துமாரியம்மன் விமான மற்றும் பரிவார மூலாலய மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.