இந்தியா

டிரைவர் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சிக்கினார்

Added : நவ 29, 2019
Share
Advertisement
புதுச்சேரி : முதலியார்பேட்டையில், லாரி டிரைவரை கொலை செய்த வழக்கில், பிரபல ரவுடி தமிழ்மணி போலீசார் பிடியில் சிக்கியுள்ளார்.கடந்த மே மாதம் 6ம் தேதி, முதலியார்பேட்டை நுாறடி சாலை, வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, கழிவுநீர் வாய்க்காலில் சாக்கு மூட்டையில் பிணம் கிடந்தது.முதலியார்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர், நெல்லித்தோப்பு கஸ்துாரிபாய்

புதுச்சேரி : முதலியார்பேட்டையில், லாரி டிரைவரை கொலை செய்த வழக்கில், பிரபல ரவுடி தமிழ்மணி போலீசார் பிடியில் சிக்கியுள்ளார்.

கடந்த மே மாதம் 6ம் தேதி, முதலியார்பேட்டை நுாறடி சாலை, வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, கழிவுநீர் வாய்க்காலில் சாக்கு மூட்டையில் பிணம் கிடந்தது.முதலியார்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர், நெல்லித்தோப்பு கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் கமலக்கண்ணன்,38. என்பதும், குடும்பத் தகராறில், அவரது மனைவி ஸ்டெல்லா,31, கணவரை அடித்து கொலை செய்ததும், உருளையன்பேட்டை ரவுடி தமிழ்மணி உதவியுடன் பிணத்தை கழிவுநீர் வாய்க்காலில் வீசியதும் தெரிந்தது.ஸ்டெல்லாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான ரவுடி தமிழ்மணியை கடந்த ஆறு மாதங்களாக தேடி வந்தனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடி தமிழ்மணி, சிறப்பு அதிரடி படை வசம் சிக்கியுள்ளார். அவரை ரகசிய இடத்தில் வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X