விழுப்புரம் : வளவனுார் அருகே மொபட் மீது பைக் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த வாலிபர் இறந்தார்.
சென்னை, ஜாபர்கான்பேட்டை வி.ஓ.சி., பிளாக்கைச் சேர்ந்தவர் ராஜா, 35; இவர் நேற்று சென்னையில் இருந்து கோலியனுாருக்கு மொபட்டில் வந்தார். கோலியனுார் அடுத்த கள்ளப்பட்டு அருகே மாலை 6:45 மணியளவில் வந்தபோது, எதிரே வந்த பைக் மீது மோதி நிலை தடுமாறி, டாடா ஏஸ் வாகனத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.