இந்தியா

'முற்றுகை போராட்டம்: பா.ஜ., மாநில தலைவர்

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி :'இலவச அரிசிக்குரிய பணத்தை உடனடியாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்காவிட்டால், முற்றுகை போராட்டம் நடத்தப்படும்' என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., கூறி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., அரசு, ஆட்சி அமைந்தபிறகு, இதுவரை 17 மாதங்கள் மட்டுமே 20 கிலோ இலவச அரிசி, ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வரும் வரை, இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படும் என அமைச்சர் கந்தசாமி கூறினார். கவர்னர் கிரண்பேடி, ஏப்ரல் மாதம் முதல் வழங்க வேண்டிய அரிசி பணத்தை உடனடியாக ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த, கடந்த 11ம் தேதி உத்தரவிட்டார்.2019 ஏப்ரல் முதல் 7 மாதங்கள் அரிசிக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மாதத்திற்கான பணம் மட்டுமே வங்கியில் செலுத்தப் பட்டுள்ளது.

மீதமுள்ள 6 மாதங்களுக்கான பணம் செலுத்தவில்லை. முன்புள்ள 17 மாதங்களுக்கான பணமும் செலுத்தவில்லை. மொத்தம் 23 மாதங்களுக்களுக்கான ரூ. 13 ஆயிரத்து 800 ரூபாய் ஏழை மக்களின் பணத்தை அரசு உடனடியாக செலுத்த வேண்டும்.மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை உடனடியாக வங்கியில் செலுத்தாவிட்டால், வரும் 2ம் தேதி பா.ஜ., சார்பில், குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 30 தொகுதிகளிலும் ஆளும் காங்., அரசை எதிர்த்து, வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X