பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக் காட்டுவோம் 2.0; கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் நடக்கிறது

Added : நவ 29, 2019
Advertisement

விழுப்புரம் : 'தினமலர்' நாளிதழின் 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக் காட்டுவோம் 2.0 நிகழ்ச்சி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நடத்தப்பட உள்ளது.

'தினமலர்' நாளிதழ் கல்விப் பணியில், கடந்த 24 ஆண்டுகளாக ஜெயித்துக் காட்டுவோம் என்ற மாணவர்களுக்கு பயன்தரும் கல்வித் திருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக் காட்டுவோம் 2.0 என்ற நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சி, சேலம் ரோடு, அண்ணா நகர், வி.ஏ.எஸ்.மஹாலில், நாளை 30ம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது.

தொடர்ந்து மறுநாள் டிசம்பர் 1ம் தேதி விழுப்புரம், திருச்சி சாலையில் உள்ள தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி வளாகத்தில், காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது.கடந்த ஆண்டைப்போலவே, இந்தாண்டும் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், தினமலர் 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக் காட்டுவோம் 2.0 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மாணவ, மாணவிகள் பள்ளிச்சீருடையில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X