பொது செய்தி

தமிழ்நாடு

நாளை விடைபெறுகிறாரா பொன் மாணிக்கவேல்?

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (22)
Advertisement
pon manickavel,பொன் மாணிக்கவேல்,IPS, சிலை, கடத்தல், விடைபெறுகிறாரா

சென்னை: சிலை கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பொன் மாணிக்கவேல் பணிக்காலம், நாளை(நவ.,30) நிறைவு பெறுகிறது.

மதுரை மாவட்டம், டி.அரசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் மாணிக்கவேல், 61. காவல் துறையில், 1989ல், ராமேஸ்வரம், டி.எஸ்.பி.,யாக பணியை துவக்கினார். சேலம் எஸ்.பி., - உளவுத்துறை டி.ஐ.ஜி., - ரயில்வே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.ஐ.ஜி., மற்றும், அதே பிரிவுகளில், ஐ.ஜி.,யாக பணியாற்றி, 2018 நவ., 30ல், ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற நிலையில் ஓய்வு பெற்றார். அன்றே, சென்னை உயர் நீதிமன்றம், இவரை ஓர் ஆண்டுக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது. அதன்படி, பொன் மாணிக்கவேலின் பணிக்காலம், நாளை நிறைவு பெறுகிறது. இதற்கிடையில், பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில், அவரது சார்பில், வழக்கறிஞர் மணி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை, டிச., 6க்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.






விடைபெறுகிறாரா?


ஏழு ஆண்டுகளில், பொன் மாணிக்கவேல், 1,146 சிலைகளை மீட்டுள்ளார். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, ஒன்பது சிலைகளை மீட்டு, தமிழகத்திற்கு எடுத்து வந்துள்ளார். சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்டோரை கைது செய்துள்ளார். அதேபோல, சிலை மோசடி செய்தது தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளையும் கைது செய்தார். இவருக்கு பணி நீடிப்பு அளிக்க வேண்டும் என, பொன் மாணிக்கவேல் ஆதரவு போலீசார் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து, போலீசார் கூறியதாவது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக, பொன் மாணிக்கவேலை நியமித்தபோது, 'மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அவர் பணியாற்றலாம்' என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே, பொன் மாணிக்கவேல் பணியில் நீடிக்கிறாரா அல்லது விடைபெறுகிறாரா என்பது தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
01-டிச-201907:10:44 IST Report Abuse
natarajan s தமிழக அரசு இவரது பணி நீடிப்பை எதிர்க்கும் , இவரது டார்கெட் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு அமைச்சரின் மருமகன் , அவர் கோவில் உதவி ஆணையராக இருந்தபோது முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று வழக்கு உள்ளது. மீண்டும் இவர் வந்தால் அது நிச்சயம் தூசி தட்டப்படும் என்ற அச்சம் தற்போதைய அரசுக்கு உள்ளது , மேலும் கூடிய விரைவில் திரு சுபாஷ் கபூருக்கு ஜாமின் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.வழக்கு நடைமுறை எதுவும் இல்லாமல் அவர் உள்ள இருக்கிறார் . திராவிட கட்சிகளுக்கு தங்களது IMAGE தான் முக்கியம், பாரம்பரியம், கலாச்சாரம் என்பதெல்லாம் மேடை பேச்சுதான் .
Rate this:
Share this comment
Cancel
Subramaniam - Prague,செக் குடியரசு
01-டிச-201905:34:55 IST Report Abuse
Subramaniam இந்து விரோதி பகுத்தறிவு பெரியார் திராவிட கும்பல்களை வேட்டையாடிய மாணிக்கவேல் சிங்கத்தை தொடர்ந்து பணியமர்த்த வேண்டும். ஐயாவின் சேவை இந்துக்களுக்கு தொடர்ந்து தேவை.
Rate this:
Share this comment
Cancel
Anjali - chennai,இந்தியா
29-நவ-201918:46:49 IST Report Abuse
Anjali நேர்மை அண்ட் கண்ணியம் இவரிடம் உண்டு ,கடவுள் அருள் நிச்சயம் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் உண்டு , தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கும் இந்த திராவிட அரசியல் வாதிகளை மக்கள் புறக்கணிக்கணும் , கோயில் நமது முன்னோர்கள் நமக்கு தந்த சொத்து அதை நம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொடுக்கணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X