இந்தியா

கனரக வாகனங்களில் ஹாரன் பயன்பாடு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : 'கனரக வாகனம் மற்றும் பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான ஒலிப்பான்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கனரக வாகனம் மற்றும் பஸ்களில் பயன்படுத்தப்படும் ஹாரன் எனப்படும் ஒலிப்பான்களின் அளவு, அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துவதே ஆகும். ஒலி அளவு, 80-90 டெசிபலுக்கு மேல் இருக்கும்போது, நமது செவிப்பறை பழுது அடைய வாய்ப்புள்ளது.மேலும், இதனால் சாலையில் செல்லும் முதியோர், பொதுமக்கள் ஒருவித பயத்தால் பாதிக்கப்படுவர். சாலையில் விபத்துகள் ஏற்பட காரணமாகவும் உள்ளது.வாகனங்களால் ஏற்படுத்தப்படும் அதிக அளவு ஒலியினால், நோயால் பாதிக்கப்படடோர், சாலையை பயன்படுத்துவதில் பெரும் இன்னலையும் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடுகிறது.எனவே, வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுள்ள ஒலிப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்துவது விதிமுறையை மீறும் செயலாகும். மீறினால், போக்குவரத்து துறையால் அபராதம் விதிக்கப்படும். இது மட்டுமின்றி மாசுக் கட்டுப்பாட்டு துறையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்.அபராதத்தை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், வாகனங்களில் குறிப்பிட்ட அளவுள்ள ஒலிப்பான்களை பயன்படுத்துமாறு வாகன உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X