இந்தியா

திறமை, முயற்சி இருந்தால் வாய்ப்பு தேடி வரும்; கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு அறிவுரை

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி துணை முதல்வர் செல்வசுந்தரி வரவேற்றார். கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பேசியதாவது:பள்ளிப் படிப்பின்போதே உயர்கல்வி குறித்த தேர்வை மாணவர்கள் முடிவு செய்ய வேண்டும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்த படிப்பை தேர்வு செய்கிறோமோ அதற்கேற்ப தங்களை தற்போதிருந்தே தயார்படுத்திக்கொள்ள வேண்டும். படிக்க விரும்பும் உயர்கல்விக்கு தேவையான தகுதி என்ன, எந்த கல்லுாரியை தேர்வு செய்வது என முடிவெடுக்க வேண்டும்.புதுச்சேரியில் பொறியியல், மருத்துவக் கல்லுாரியில் பயில வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்லுாரிகளிலும் படிக்கலாம். ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,யில் சேரலாம். இவற்றில், புதுச்சேரிக்கென தனி இட ஒதுக்கீடும் உள்ளது. அதை பயன்படுத்திக்கொள்ளலாம். திறமையை வளர்த்துக்கொண்டு, முயற்சி செய்தால் கண்டிப்பாக உயர்கல்வி வாய்ப்பு தேடி வரும்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மருத்துவம், செவிலியர், பட்டயக் கணக்காளர் போன்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து சாதனை படைத்த முன்னாள் மாணவியர், தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடினர். இலக்கு, கடின உழைப்பு, விடா முயற்சி, தெளிவான திட்டமிடல், இலக்கு ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாணவிகள் சத்தியப்பிரியா, ஜோஸ்லின் தொகுத்து வழங்கினர். மாணவி லட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X