இந்தியா

ஆகாஷ் எஜூகேஷன் மையம் புதுச்சேரியில் துவக்கம்

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : ஆகாஷ் எஜூகேஷன் நிறுவனம், புதுச்சேரியில் முதல் மையத்தை துவக்கியுள்ளது. இது, இந்தியாவில் 191 -வது மையமாகும்.ஆகாஷ் எஜூகேஷன் நிறுவனம், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 190 மையங்களை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் தேசிய அளவிலான நிறுவனமாகும். புதுச்சேரியில் முதல் முறையாக தனது 191 மையத்தை நேற்று முன்தினம் துவக்கியது. நுாறடி சாலை இந்திரா சதுக்கம் அருகே ஜி.கே.எம். ஆர்கேட் கட்டடத்தில் ஆகாஷ் எஜூகேஷன் நிறுவனத்தை, தலைமை கார்ப்பரேட் ஆலோசகர் சவுத்ரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிறுவன துணை பிராந்திய இயக்குனர் சந்தன் சந்த், நிறுவன அதிகாரிகள், ஆசிரியர்கள், நகர பிரமுகர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த மையத்தில் 7 வகுப்பறைகள், கம்ப்யூட்டர் அறை, 380க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமரக்கூடிய இட வசதி உள்ளது.நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமை கார்ப்பரேட் ஆலோசகர் சவுத்ரி கூறுகையில்,' டாக்டர்கள், ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுனர்களாக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை நனவாக்க அவர்களுக்கு உதவுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆகாஷ் எஜூகேஷன் நிறுவனம் தனது மையத்தை விரிவுபடுத்தியுள்ளது. போட்டி தேர்வுக்கு ஆட்களை தயார்படுத்துவதில் தேசிய அளவில் எங்கள் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.புதுச்சேரியில் துவங்கப்பட்ட புதிய கிளை ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு அடித்தள நிலை படிப்புகளை வழங்குவதுடன், மருத்துவ நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்.போட்டி தேர்வுகளில் தேர்வாகி இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையே, நிறுவனத்தின் கல்வி கற்பிக்கும் தன்மைக்கு உதாரணமாகும். இதனால், மருத்துவம் மற்றம் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வாக ஆகாஷ் அமைந்திருக்கிறது.ஆசிரிய வல்லுர்கள், மணவர்கள் அவர்களுடைய குறிக்கோள் லட்சியத்தை அடைவதற்கு உதவும் நவீன மற்றும் ஒன்று கலந்த கற்பிக்கும் முறைகளை பின்பற்றுகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X