இந்தியா

கொரியர் ஊழியர் துாக்குபோட்டு தற்கொலை

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : குடும்ப தகராறில், கணவர், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, திலாசுப்பேட்டை வேலன் தோட்டம் காந்தி நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குடியரசுமணி, 34; கொரியர் ஊழியர். இவரது மனைவி மாதவா,30. இவர்களுக்கு சஞ்சய், 10 என்ற மகன் உள்ளார்.மது பழக்கமுள்ள குடியரசுமணி, மனைவியிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்தார். அவர்களை, இரு வீட்டு தரப்பினரும் சமாதானம் செய்து வந்தனர்.இரண்டு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குடியரசுமணியை, உறவினர்கள் காப்பாற்றினர். கடந்த 26ம் தேதி இரவு, குடியரசு மணி, மனைவியிடம் தகராறு செய்தார். விரக்தியடைந்த மாதவா, அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.வீட்டில் இருந்த குடியரசு மணி, இரவு 11.00 மணியளவில் துாக்கு போட்டுக் கொண்டார். அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X