இந்தியா

ஒன்றே பாரதம், உயர்ந்த பாரதம் கல்லுாரியில் மன்றம் துவக்கம்

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில், ஒன்றே பாரதம் உயர்ந்த பாரதம் மன்றம் துவக்கப்பட்டது.

'ஒன்றே பாரதம், உயர்ந்த பாரதம்' கொள்கை, 2015ம் ஆண்டில் இருந்து பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஒன்றே பாரதம் உயர்ந்த பாரதம் மன்றம் தொடங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, நிறுவன இயக்குனர் அறவாழி இருசப்பன் தலைமை தாங்கினார். உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் மோகன்தாஸ் மன்றத்தை தொடங்கி வைத்து, பேசினார்.மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் அலமேலுமங்கை நோக்கவுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில், கலை மற்றும் பாண்பாட்டு பரிமாற்றத்தால் தேசிய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X