இந்தியா

நுாறுநாள் வேலைக்கு குறைவான கூலி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

Added : நவ 29, 2019
Advertisement

வில்லியனுார் : நுாறு நாள் வேலைக்கு குறைவான கூலி வழங்குவதை கண்டித்து, வி.சி., கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமப்புற விவசாய கூலித் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு நுாறு நாள் வேலை வழங்கும் திட்டம், புதுச்சேரியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு, தொழிலாளர்களுக்கு ரூ. 229 வீதம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நாள் நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 170 மட்டுமே ஊதியம் வழங்கி வருகின்றனர்இதைக் கண்டித்து, நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மற்றும் வி.சி., கட்சியினர், நேற்று வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, முழு கூலித் தொகையை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X