இந்தியா

மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு வார விழா

Added : நவ 29, 2019
Share
Advertisement
புதுச்சேரி : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவில், துணை சபாநாயகர் பாலன் பங்கேற்று பரிசு வழங்கினார்.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் சார்பில், தேசிய ஒருமைப்பாட்டு வார விழா, மகளிர் தின விழா, பூமியான்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. துணை சபாநாயகர் பாலன்

புதுச்சேரி : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவில், துணை சபாநாயகர் பாலன் பங்கேற்று பரிசு வழங்கினார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் சார்பில், தேசிய ஒருமைப்பாட்டு வார விழா, மகளிர் தின விழா, பூமியான்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. துணை சபாநாயகர் பாலன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசு வழங்கினார்.விழாவில், குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி ரத்னா வரவேற்றார். திட்ட அதிகாரி சரோஜினி வாழ்த்திப் பேசினார். இயக்குனர் யஷ்வந்தையா நோக்கவுரையாற்றினார்.டாக்டர்கள் திலகம், ஜமுனா ஆகியோர், குழந்தை நலம், பெண்கள் நலம் குறித்து சிறப்புரை ஆற்றினர். பெண்கள் பாதுகாப்பு குறித்து, திட்ட பாதுகாப்பு அதிகாரி ஸ்டெல்லா மேரி பேசினார்.அங்கன்வாடி ஊழியர்கள், சுய உதவிக் குழுவினர் மற்றும் தாய்மார்கள் பங்கேற்றனர். அங்கன்வாடி ஊழியர் பூங்கோதை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X