இந்தியா

அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை விக்டர் சிமோன் சாலையில் கடந்த 16ம் தேதி காலை 7.௦௦ மணியளவில், 45 வயது மதிக்கத் தக்க ஆண் இறந்து கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய பெரியக்கடை போலீசார், அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இவரைபற்றி தெரிந்தவர்கள், பெரியக்கடை போலீஸ் நிலையத்தை 2338876 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஜவுளிக்கடை எதிரில், 70 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத முதியவர் நோய்வாய்ப்பட்டு, மயங்கி கிடந்தார்.தகவலறிந்த பெரியக்கடை போலீசார், முதியவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் யார் என போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X