பெண்ணிடம் செயின் பறிப்பு | Dinamalar

இந்தியா

பெண்ணிடம் செயின் பறிப்பு

Added : நவ 29, 2019

பாகூர் : தவளக்குப்பம் அருகே பெண்ணிடம் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 42; கப்பல் பணியாளர். இவரது மனைவி வாணி, 36; நேற்று முன்தினம் இரவு, புதுச்சேரியிலிருநது கணவர் கிருஷ்ணமூர்த்தியுடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நோனாங்குப்பம் மேம்பாலத்தில் சென்றபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர், வாணி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.இது குறித்த புகாரின்பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X