இந்தியா

போலி பத்திரம் மூலம் வீடு அபகரிப்பு இரண்டு பேர் மீது வழக்கு பதிவு

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : முதலியார்பேட்டையில், போலி பத்திரம் தயாரித்து வீட்டை அபகரிக்க முயன்ற இரண்டு பேர் மீது, கோர்ட் உத்தரவின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு கார்கில் நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். 50. தற்போது, தென் ஆப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.இவர், முதலியார்பேட்டையில் உள்ள தன் வீட்டை, வேல்ராம்பட்டை சேர்ந்த பிரகாஷ், 47, என்பவரிடம் கிரய அச்சாரம் செய்து, பொது அதிகார பத்திரமும் கொடுத்திருந்தார்.இந்த பொது அதிகார பத்திரத்தைப் பயன்படுத்தி, பிரகாஷ் ஏமாற்ற முயன்றதால், அந்த பத்திரத்தை கோவிந்தன் ரத்து செய்து விட்டார். இது தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ரத்து செய்யப்பட்ட பொது அதிகார பத்திரத்தை கொண்டு, பிரகாஷ், கோவிந்தன் வீட்டை, புவனேஸ்வரி என்பவருக்கு ரூ. 28 லட்சத்திற்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார்.அத்துடன் ரூ.50 ஆயிரம் செலவு செய்து கட்டப்பட்டு இருந்த கட்டடம் இடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து கோவிந்தன் போலீசில் புகார் செய்தார். சிவில் வழக்கு என்பதால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து, புதுச்சேரி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கோவிந்தன் முறையிட்டார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்பேரில், போலி பத்திரம் தயாரித்த பிரகாஷ், 47, இடத்தை வாங்கிய புவனேஸ்வரி,32, ஆகியோர் மீது, நான்கு பிரிவுகளில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X