புதுச்சேரி : செஞ்சி சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையால், நகரின் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி மேடு பள்ளமாக மாறியுள்ளது.சட்டசபை பின்புறம் உள்ள செஞ்சி சாலையில், அரசு பொது மருத்துவமனை அருகே நேற்று காலை சாலையில் திடீரென இரண்டு அடி அகலம், ஐந்து அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.இதனால் அந்த சாலை வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.