பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க விழிப்புணர்வு நடைபயணம் | Dinamalar

இந்தியா

பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க விழிப்புணர்வு நடைபயணம்

Added : நவ 29, 2019
Share
புதுச்சேரி : பெண்கள், பெண் குழுந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுள்ள குழுவிற்கு, புதுச்சேரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைய தடுக்க வேண்டும், தமிழகம், புதுச்சேரியை போதையற்ற, வன்முறையற்ற நகரமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25ம் தேதி, வடலுார் மற்றும்

புதுச்சேரி : பெண்கள், பெண் குழுந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுள்ள குழுவிற்கு, புதுச்சேரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைய தடுக்க வேண்டும், தமிழகம், புதுச்சேரியை போதையற்ற, வன்முறையற்ற நகரமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25ம் தேதி, வடலுார் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து இரண்டு பெண்கள் குழுவினர், சென்னை நோக்கி விழிப்புணர்வு நடைபயண பிரசாரத்தை துவக்கினர்.இதில், வடலுாரில் இருந்து அனைத்திந்திய மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி தலைமையிலான குழுவினர் நேற்று புதுச்சேரி வந்தனர். இவர்களுக்கு, இந்திரா சதுக்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் சார்பில் கம்பன் நகரிலும், அஜிஸ் நகரில் சி.ஐ.டி.யூ., அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், இந்த குழு சென்னை புறப்பட்டு சென்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X