இந்தியா

அரசுத் துறைகளில் 800க்கும் மேற்பட்ட பதவிகள் காலி... இளைஞர்களுக்கு வேலை தர நடவடிக்கை தேவை

Added : நவ 29, 2019
Advertisement
அரசுத் துறைகளில் 800க்கும் மேற்பட்ட பதவிகள் காலி... இளைஞர்களுக்கு வேலை தர நடவடிக்கை தேவை

பி.சி.எஸ்., அதிகாரிகள் என அழைக்கப்படும் புதுச்சேரி சிவில் சர்வீஸ் அதிகாரிகள், புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இருந்தபோதும், 54 பி.சி.எஸ்., அதிகாரிகள் பதவிகளில், 17 பதவிகள் காலியாக உள்ளன.

தற்போதைய காலக்கட்டத்தில், புதுச்சேரி அரசு அலுவலகங்கள் அனைத்திலும் எதிரொலிக்கும் ஒரே வார்த்தை 'நிதி நெருக்கடி', 'நிதிப் பற்றாக்குறை' என்பதுதான். நிதியை சிக்கனமாகவும், கவனமாகவும் செலவிட வேண்டிய கடினமான சூழல் நிலவுகிறது.அரசு துறைகளின் நிதி தொடர்பான அனைத்து கோப்புகளையும் முதுநிலை கணக்கு அதிகாரிகளும், இளநிலை கணக்கு அதிகாரிகளும் கையாண்டு வருகின்றனர். ஆனால், மொத்தமுள்ள 45 முதுநிலை கணக்கு அதிகாரிபதவிகளில் 41 இடங்கள் காலியாக உள்ளன. அதுபோல, 67 இளநிலை கணக்கு அதிகாரி பதவிகளில் 12 இடங்கள் காலியாக உள்ளன.

முதுகெலும்பான பதவிகள்

அடுத்ததாக, 350 கண்காணிப்பாளர் பதவிகளில் 120 பதவிகள் காலியாக உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிப்பது, ஒருங்கிணைப்பது கண்காணிப்பாளர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.அமைச்சக ஊழியர்கள் என அழைக்கப்படும் உதவியாளர், மேல்நிலை எழுத்தர், இளநிலை எழுத்தர் ஆகிய பதவிகள், அலுவலக நிர்வாகத்தின் முதுகெலும்பான பதவிகளாகும். கோப்புகளை தயார் செய்வது உள்ளிட்ட முக்கியமான பணிகளை அமைச்சக ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மொத்தமுள்ள 1,135 உதவியாளர் பதவிகளில் 270ம், 1,021 மேல்நிலை எழுத்தர் பதவிகளில் 300ம், 434 இளநிலை எழுத்தர் பதவிகளில் 50 இடங்களும் காலியாக உள்ளன.துரித நடவடிக்கை தேவைகாலியாக உள்ள பதவிகள் கூடுதல் பொறுப்பு என்ற அடிப்படையில் கவனிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக பணியாற்றுபவர்கள் பதவி உயர்வு இல்லாமல் ஓய்வு பெறுகின்றனர். எனவே, பதவி உயர்வுகளை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை தேவை.

இதுமட்டுமல்லாமல், காலியாக உள்ள பதவிகளை நிரப்பாததால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத அவலமும் அரங்கேறி வருகிறது. காலி இடங்களை பதவி உயர்வு மூலமாக உடனுக்குடன் நிரப்புவதன் மூலமாக, இளநிலை, மேல்நிலை எழுத்தர் பதவிகளில் நுாற்றுக்கணக்கான காலியிடங்கள் ஏற்படும். இவற்றை, படித்த இளைஞர்களை கொண்டு நேரடியாக நிரப்பவும் அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

நிர்வாகம் வேகம் பெறும்

புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூறும்போது, 'பி.சி.எஸ்., பதவியில் ஆரம்பித்து, இளநிலை எழுத்தர் பதவி வரை 810க்கும் மேற்பட்ட பதவிகள் காலியாக உள்ளன. இதனால், கூடுதல் பொறுப்பு, 'கரண்ட் டூட்டி சார்ஜ்' என்ற அடிப்படையில் கவனிக்கப்பட்டு வருகின்றன. இது, தவறான நடைமுறையாகும்.

இதுபோன்ற காரணங்களால், 35 ஆண்டுகளாக பணியாற்றியும் பதவி உயர்வின்றி ஓய்வு பெறுகின்றனர். காலியாக உள்ள பதவிகளை நிரப்பினால் சங்கிலி தொடர்போல அனைத்து நிலைகளில் பதவி உயர்வு கிடைப்பதுடன், அலுவலக நிர்வாகம் வேகம் பெறும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X