இந்தியா

சாலை விபத்தில் பெண் பலி

Added : நவ 29, 2019
Advertisement

பாகூர் : அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், சாலையை கடக்க முயன்ற பெண் உயிரிழந்தார்.

தவளகுப்பம் அடுத்த நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன், 54 மீனவர். இவரது மனைவி சரோஜா, 45; மீன் வியாபாரம் செய்கிறார். நேற்று அதிகாலை மீன் வாங்குவதற்காக, புதுச்சேரியில் உள்ள மீன் மார்க்கெட்டிற்கு புறப்பட்டு சென்றார். தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில், சாலையை கடக்க முயன்றபோது, கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சரோஜா மீது மோதியது.இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து, கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X