இந்தியா

அரசின் கவனத்தை ஈர்க்க 'கருப்பு பேட்ஜ்'

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு அலுவலகங்களில் அமைச்சக ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

புதுச்சேரி அரசில் காலியாக உள்ள பி.சி.எஸ்., அதிகாரி பதவிகள், முதுநிலை, இளநிலை கணக்கு அதிகாரி பதவிகள், கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் மேல்நிலை, இளநிலை எழுத்தர் பதவிகளை பதவி உயர்வு மூலமாக உடனடியாக நிரப்ப வேண்டும், பணி ஓய்வு பெறும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதிய பயன்களை உடனுக்குடன வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்துவது என, ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.முதல்கட்டமாக, கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அமைச்சக ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து அலுவலகங்களில் பணியாற்றினர்.இதுபோன்ற போராட்டங்களில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம். ஆனால், பல அலுவலகங்களில் அதிகாரிகள் பலரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.அதுபோல, தலைமைச் செயலகத்திலும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளிலும் நடந்த இந்த போராட்டத்தில் 2,300க்கும் மேற்பட்ட அலுவலர்களும், ஊழியர்களும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X