இந்தியா

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.1000 கருணைத்தொகை; முதல்வர் நாராயணசாமி உத்தரவு

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.1000 கருணைத் தொகை வழங்க, முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மாதம், பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவாக சம்பளம் வாங்கும், போனஸ் பெறாத அங்கன்வாடி உதவியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும், 2018-2019ம் ஆண்டிற்கான கருணை தொகை, தலா ரூ. ஆயிரம் வழங்குவதற்கான அரசாணை வெளியிட, முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் 450 பேர் பயன் பெறுவார்கள்.

பொதுப்பணித்துறையை சார்ந்த வவுச்சர் ஊழியர்கள், கடந்த நான்கு நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் நாராயணசாமி, பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கலந்து பேசி, தலைமை பொறியாளரிடம் அறிவுறுத்தி, போராட்டத்தை முடித்து வைத்தார்.மேலும், அவர்களின் கோரிக்கையை பொதுப்பணித்துறை செயலரும், தலைமை பொறியாளரும் பரிவுடன் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X