இந்தியா

பொது பயன்பாட்டு இடத்தில் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு; அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., வாக்குவாதம்

Added : நவ 29, 2019
Advertisement

பாகூர் : காட்டுக்குப்பத்தில் பொது மக்கள் பயன்படுத்தி வரும் இடத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனவேலு எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாகூர் தொகுதி காட்டுக்குப்பத்தில் பொது நிகழ்ச்சிகளை நடத்திடும் வகையில் விளையாட்டு திடல், கலையரங்கம் போன்றவை இல்லாமல் இருந்தது. கடந்த 2016ம் ஆண்டு, குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ள பிப்டிக் தொழிற்பேட்டையில் புதர் மண்டிக் கிடந்த ஒரு பகுதியை, தனது செலவில் சீரமைத்து கொடுத்தார். அந்த இடத்தை விளையாட்டு திடலாகவும், பொது நிகழ்ச்சிகளை நடத்தும் மேடையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.அந்த இடத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்க அரசு முடிவு செய்து, தொழிலாளர் துறை துணை இயக்குனர் சிவக்குமார், பாகூர் தாசில்தார் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்தனர்.தகவலறிந்த தனவேலு எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு சென்று, ஆய்வு நடத்திய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இதே பகுதியில் ஏராளமான நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. அங்கு, புதிய தொழிற்சாலைகளை அமைத்திட நடவடிக்கை எடுங்கள். இந்த இடத்தை கையகப்படுத்தக்கூடாது என கூறினார்.இது தொடர்பாக உயரதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் கூறி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X