இந்தியா

மைக் பயன்படுத்த அனுமதி மறுப்பு எம்.எல்.ஏ.,க்கள் சாலை மறியல்

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : போராட்டத்தில் மைக் பயன்படுத்த போலீசார் அனுமதி மறுத்ததை கண்டித்து, பா.ஜ., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 1311 வவுச்சர் ஊழியர்கள், தங்களுக்கு 30 நாட்கள் பணி வழங்க வேண்டும், மத்திய அரசின் சட்டக்கூலி ரூ.648 வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25ம் தேதி முதல் பணியாளர் நல கூட்டமைப்பின் சார்பில் தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து, பங்கேற்று வருகின்றனர்.நேற்று காலை, சுதேசி மில் அருகே நடந்த போராட்டத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன், பா.ஜ., தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்றனர்.போராட்டத்தில், நேற்று முன்தினம் வரை மைக்கில் பேச அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.க்கள், ஊழியர்களுடன், மறைமலை அடிகள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, மைக் பயன்படுத்த போலீசார் அனுமதி வழங்கியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X