இந்தியா

தி.மு.க.,வின் இரட்டை வேடம் அன்பழகன் குற்றச்சாட்டு

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : 'புதுச்சேரியில் தி.மு.க.,வினர் போடும் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் பேசினார்.

புதுச்சேரி சுதேசி மில் அருகே, பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பட்டினி போராட்டத்தில், அவர் பேசியது:புதுச்சேரியில் தி.மு.க., துணையோடு ஆட்சி நடத்தும் காங்., தொழிலாளர் விரோத அரசாக உள்ளது. வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, அரசு சார்பு நிறுவனங்களில் இருந்தவர்களை நீக்கியது. பஞ்சாலை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மூடியது. அரசின் தவறான தொழிற்கொள்கையால், இயங்கி வந்த தனியார் தொழிற்சாலைகளும் மூடப்பட்டு விட்டன.

பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்களுக்கு, மத்திய அரசு நிர்ணயித்த கூலியை வழங்கவில்லை, 16 நாட்கள் மட்டுமே வேலை வழங்கி, மாதம் ரூ.3200 மட்டுமே சம்பளம் தருகிறது. இதை வைத்து குடும்பம் நடத்த முடியாது.காங்., அரசின் தவறை தி.மு.க.வினரும் ஒப்புக்கொண்டு, இந்த போராட்டத்தில் பேசியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்குத்தான் ஆதரவு, ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமத்திற்கு இல்லை என, கடந்த 4 ஆண்டுகாலமாக கூறிக்கொண்டே ஆட்சியிலும் பங்கெடுத்து வருகின்றனர். தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X