இந்தியா

'வணிக வரி ஆணையராக பி.சி.எஸ்., அதிகாரியை நியமித்தது செல்லாது'

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : 'புதுச்சேரி வணிக வரி ஆணையராக பி.சி.எஸ்., அதிகாரியை நியமித்தது செல்லாது' என கூறி உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயம். அந்த நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி வணிகவரித் துறையில், துணை ஆணை யர், உதவி ஆணையர், வணிக வரி அதிகாரி, துணை வணிக வரி அதிகாரி, உதவி வணிக வரி அதிகாரி என ஐந்து பதவிகள் உள்ளன.புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், வணிக வரி துணை ஆணையர் பதவி தான், வணிக வரி ஆணையராக இருந்து வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு வணிக வரி ஆணையாக இருந்த ஞானசம்பந்தம் பணி ஓய்வு பெற்றார்.அதையடுத்து, உதவி ஆணையர் ராஜசேகர், கூடுதல் பொறுப்பாக, வணிக வரி ஆணையராக, 2007 ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை கவனித்து வந்தார். திடீரென இவர் புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.தற்போது, சென்னை அமலாக்க துறை துணை இயக்குனராக உள்ள ராஜசேகர், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், கடந்த 2016ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார்.அதில், வணிக வரி ஆணையர் பதவிக்கு, அத்துறையில் தகுதியான நபர்கள் இருக்கும்போது, நியமன விதிகளுக்கு புறம்பாக, பி.சி.எஸ்., அதிகாரியை நியமித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறி இருந்தார்.இவ்வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஜேக்கப் அடங்கிய பெஞ்ச் முன், அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி வணிக வரி ஆணையராக பி.சி.எஸ்., அதிகாரியை நியமித்தது செல்லாது என தீர்ப்பளித்தனர். அத்துடன், பி.சி.எஸ்., அதிகாரியை நியமித்தது விதிகளுக்கு புறம்பானது; ஏதேச்சதிகாரமானது என, அந்த நியமனத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.ராஜகேர் உதவி ஆணையராக பணி செய்த காலங்களை நிரந்தர பணி காலமாக கருதி, வணிக வரித்துறை ஆணையர் நியமனத்திற்கு அவரது பெயரை விண்ணப்பதாரராக கருத வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X