ஜகர்தா: இந்தோனேசியா அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கோழிக்குஞ்சு ஒன்றை வழங்கி உள்ளது. மொபைலை பயன்படுத்தும் நேரத்தை கோழிக்குஞ்சுகளுடன் மாணவர்கள் செலவிட அறிவுறுத்தியுள்ளது. காலை மாலையில் தீனி இடுவது பராமரிப்பது போன்ற செயல்களை தினசரி அட்டவணைப்படுத்த வேண்டுமாம். வீட்டில் வளர்க்க முடியாதவர்கள் பள்ளியில் வைத்து வளர்க்கலாம். இதன்மூலம் மொபைலில் இருந்து விடுபட்டு மனம் உடல் ரீதியாக நலமுடன் இருக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவிக்க பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.