பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து முற்றுகை

Added : நவ 29, 2019
Advertisement

ஈரோடு: டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து, டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள், 29 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு, கருங்கல்பாளையம் ஜெய கோபால் வீதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை (எண்.3405) செயல்பட்டது. இதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கலெக்டரிடமும் பலமுறை மனு கொடுத்தனர். இதனால், ஒரு மாதத்துக்கு முன் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்நிலையில், அதே பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை நேற்று மதியம், 12:15 மணிக்கு திறக்கப்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மக்கள், நேற்று மதியம் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, கடைக்கு பாதுகாப்பு அளிக்க வந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் கடையை திறந்தால், பல்வேறு சமூக விரோத செயல்கள் நடக்கும். எனவே கடையை திறக்கக்கூடாது. நிரந்தரமாக மூட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர். ஆனால் அங்கு வந்த குடிமகன்கள், டாஸ்மாக் கடை மூட எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இரு தரப்பினரும் நேருக்கு நேர் நின்று மாறி, மாறி கோஷம் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது. ஈரோடு டவுன் டி.எஸ்.பி., ராஜூ தலைமையில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. டாஸ்மாக் கடையை மூடுவது ஒன்றே தீர்வாக இருக்கும் என, பொதுமக்கள் கூறினர். மதியம், 2:00 மணிக்கு துவங்கிய முற்றுகை மாலை, 4:15 மணி வரை நீடித்தது. இந்நிலையில் கடையை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்திருந்த, 11 பெண்கள் உள்ளிட்ட, 29 பேரை போலீசார், வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். போலீஸ் பாதுகாப்புடன், மதுபான விற்பனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X