சேறும், சகதியுமான மார்க்கெட்: வியாபாரிகள், மக்கள் தவிப்பு

Added : நவ 29, 2019
Advertisement

ஈரோடு: மழையால், ஈரோடு தினசரி மார்க்கெட் சேறு, சகதியாக காட்சியளிக்கிறது. ஈரோடு, நேதாஜி தினசரி மார்க்கெட் காலி இடத்தில்தான், தினமும் அதிகாலையில் காய்கறி, வெங்காயம், பழங்கள் மொத்த வியாபாரம் நடைபெறும். எனவே, காலை நேரங்களில் கன ரக வாகனங்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். டெம்போ வேன், சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்டவையும் வந்து செல்கின்றன. இந்நிலையில், ஈரோட்டில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. இதில் மார்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு, சிலர் சேற்றில் வழுக்கி விழுந்தனர். சேறு, சகதியால் கொசுக்கள் உற்பத்தியாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதியில் சேறு, சகதி ஏற்படாமல் இருக்க முறையான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X