பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் மாணவ,மாணவியருக்கு பரிசு

Added : நவ 29, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கடந்த, 15ல் வண்ணம் தீட்டுதல், பேச்சு போட்டி நடந்தது. இதில், 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது. ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி, 1 முதல், மூன்று வரை ஒரு பிரிவும், ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.சி.வரை மற்றொரு பிரிவாகவும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ், பரிசு கோப்பை வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சதீஷ் குமார், பரிசு வழங்கினார். ஈரோடு மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி உடனிருந்தார். ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி வரலாற்று துறை மாணவியர், 25 பேர் கடந்த ஏழு நாட்களாக அருங்காட்சியக காட்சி பொருட்களை பாதுகாப்பது குறித்த பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர். நேற்று, அவர்களுக்கு பயிற்சி பட்டறை நிறைவு பெற்றது. மேலும், 25 பேர், ஏழு நாட்கள் பயிற்சி பட்டறைக்கு வந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X