பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணையில் 20 நாளுக்கு பின் நீர்மட்டம் 105 அடிக்கு கீழ் சரிவு

Added : நவ 29, 2019
Advertisement

புன்செய்புளியம்பட்டி: தொடர்ந்து, 20 நாட்கள், 105 அடியில் நீடித்த பவானிசாகர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 104.95 அடியாக சரிந்தது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர் பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மலைப்பகுதிகளில் கொட்டிய கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் கடந்த, 8ல், முழு கொள்ளளவான, 105 அடியை தொட்டது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நீர்வரத்து சரிந்து வருகிறது. இதனால் தொடர்ந்து, 20 நாட்கள் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான, 105 அடியில் நீடித்த நிலையில் நேற்று மாலை, 104.95 அடியாக சரிந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 2,844 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 577 கனஅடியாக சரிந்தது. அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, பவானி ஆற்றில், 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில், 2,200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை குறைந்ததால், தற்போது நீர் வரத்தை விட, வெளியேற்றம் கூடுதலாக உள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X