பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்ற முதியோர் இல்லம் துவங்க அழைப்பு

Added : நவ 29, 2019
Advertisement

ஈரோடு: மாநில அரசின் நிதியுதவியுடன், முதியோர் இல்லங்கள், முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள், மத்திய அரசு நிதியுதவியுடன் மூத்த குடிமக்களுக்கான திட்டம், ஸ்வதார் இல்லங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. சமூக நலத்துறை மூலம், புதிய முதியோர் இல்லங்கள் துவங்க, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தின், சமூகநலத்துறை அலுவலகத்தில், வரும், 30 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படும் ஆதரவற்ற முதியோர்களுக்கான முதியோர் இல்லங்கள், 40 முதியோர் தங்கும் வகையில் அமைத்தல். முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகம், தலா, 25 பேர் தங்கும் வகையில் அமைத்தல். மத்திய நிதியுடன், முதியோர் இல்லம், 25 பேர் தங்கும் வகையில் அமைத்தலுக்கு உதவி வழங்கப்படுகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், 30 பெண்கள் தங்கும் ஸ்வதார் இல்லங்கள் அமைக்கலாம். தொண்டு நிறுவனங்கள், தங்களது ஆவணங்களுடன், தாசில்தாரிடம் பெறப்பட்ட, 'டி' சான்று, தீயணைப்பு துறை சான்று என உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X