பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு தேர்வு: ஈரோட்டில் டிச., 2ல் துவக்கம்; கலெக்டர் தகவல்

Added : நவ 29, 2019
Advertisement

ஈரோடு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், கேங்மேன் (பயிற்சி) என்ற பதவிக்கான நேரடி பணி நியமனம் செய்ய, ஈரோடு மாவட்டத்துக்கு, 4,793 நபர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வுகள் டிச., 2 முதல், 13 வரை, தினமும் காலை, 8:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்க உள்ளது, என கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு, ஈ.வி.என்., சாலையில் உள்ள ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், விருந்தினர் மாளிகை மற்றும் கோபி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட கொளப்பலூர் செயற்பொறியாளர் துணை மின் நிலையத்தில், தேர்வு நடக்கிறது. தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள், குறித்த நேரத்தில் அனுமதி சீட்டு, உரிய ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும். போட்டோ அடையாள அட்டை அல்லது கடைசியாக படித்த கல்வி நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட ரெக்கார்டு சீட்டு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும், எஸ்.எஸ்.எல்.சி., என ஏதாவது ஒன்றன் மதிப்பெண் சான்று, ஜாதி சான்று, முன்னுரிமை வகுப்பை சார்ந்தோர் அதற்கான சான்று, பண்பு மற்றும் ஒழுக்கச்சான்று (இவை இரண்டும், கடைசியாக படித்த கல்வி கூடத்தில் பெற வேண்டும்), வேலைவாய்ப்பக பதிவு போன்றவற்றை எடுத்து வர வேண்டும். இச்சான்றுகளின் சான்றொப்பம் இட்ட நகலுடன் பங்கேற்க வேண்டும். சரி பார்ப்புக்கு பின், உடற்தகுதி தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X