பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

Added : நவ 29, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு, கடந்த வாரங்களை விட, கூடுதலாக மாடுகள் விற்பனைக்காக வரத்தானது.
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு கடந்த இரண்டு மாதமாக பலத்த மழையால், மாடுகளின் வரத்து குறைந்து, விற்பனையும் குறைந்தது. ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி பகுதி விவசாயிகள் மாடுகளுடன் வந்திருந்தனர். நேற்று, 2,000 ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 200 கன்றுகள், 10 ஆயிரம் ரூபாய் முதல், 38 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 300 பசு, 12 ஆயிரம் முதல், 48 ஆயிரம் வரை, 200 எருமை என விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரங்களை ஒப்பிடுகையில், நேற்று அதிக எண்ணிக்கையில் மாடுகள் வந்தன. அதுபோல, தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநில வியாபாரிகள், விவசாயிகள் அதிகமாக வந்தனர். குறிப்பாக, தேனி, கம்பம், போடி பகுதியை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், கால்நடை மருத்துவர்கள் குழுவாக வந்தனர். தமிழக அரசின் கறவை மாடுகள் திட்டத்துக்காக, 150க்கும் மேற்பட்ட மாடுகளை வாங்கி சென்றனர்.

இது குறித்து, மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கடந்த பல வாரமாக மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த வாரம் கூடுதலாக மாடுகள் வரத்தாகி உள்ளது. பிற மாநில வியாபாரிகள், விவசாயிகள் அதிகமாக மாடுகளை வாங்கி சென்றுள்ளனர். தேனி, போடி, கம்பம் விவசாயிகள், தமிழக அரசின் கறவை மாடுகள் திட்டத்துக்காக, 150க்கும் மேற்பட்ட மாடுகளை வாங்கி சென்றுள்ளனர். நேற்று, 90 சதவீத மாடுகள் விற்பனையானது. 2.5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X