பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார வளாக பணி தொடக்கம்: சங்க நிர்வாகிகள் முற்றுகை

Added : நவ 29, 2019
Advertisement

மொடக்குறிச்சி: அவல்பூந்துறை அருகே, சுகாதார வளாக கட்டடப்பணிகள் துவங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்குந்த மகாஜன சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மொடக்குறிச்சி ஒன்றியம், அவல்பூந்துறை நால்ரோட்டில் நிழற்கூடம் மற்றும் சுகாதார வளாகம் அமைக்க, 2016ல் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த இடம் செங்குந்த மகாஜன சங்கத்திற்கு சொந்தமான பாவடி நிலம் என புகார் எழுந்தது. தவிர, ஈரோடு உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில், ஐந்து பேர் வழக்கு தொடர்ந்தனர். கடந்த, 26ல் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் மகாலட்சுமி உள்ளிட்ட பலர் பூமி பூஜை செய்தனர். இதற்கு, செங்குந்த மகாஜன சங்க தலைவர் ஏ.எஸ்.சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மகாலட்சுமியிடம் மனு வழங்கினர். ஆனால், நடவடிக்கை இல்லை. நேற்று காலை, 11:00 மணிக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகளை ஒப்பந்ததாரர்கள் துவக்கினர். இதை, லோகநாதன் தலைமையில் சங்க நிர்வாகிகள் பலர் முற்றுகையிட்டு தடுத்தனர். பின்னர் அந்த நிலத்தில் கைகளை உயர்த்தி எதிர்ப்பு தெரிவித்தனர். அரச்சலூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, கலெக்டரின் உத்தரவு நகல் உள்ளதாக தெரிவித்தனர்.இதையடுத்து நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X