ரூ.2.77 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.77 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

Added : நவ 29, 2019
Share
அந்தியூர்: அந்தியூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தவிட்டுப்பாளையத்தில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 2,157 பயனாளிகளுக்கு, 2.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், அந்தியூர் எம்.எல்.ஏ., ராஜா வழங்கினர். பின்னர், அமைச்சர் கருப்பணன் பேசியதாவது: மாணவ,

அந்தியூர்: அந்தியூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தவிட்டுப்பாளையத்தில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 2,157 பயனாளிகளுக்கு, 2.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், அந்தியூர் எம்.எல்.ஏ., ராஜா வழங்கினர். பின்னர், அமைச்சர் கருப்பணன் பேசியதாவது: மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி, பாடப்புத்தகம், பஸ் பயண அட்டை, சீருடை உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன. அடுத்த கல்வி ஆண்டு, காலுறைகளுடன் கூடிய காலணிகள் வழங்கப்படவுள்ளன. பெண்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்பதற்காக தாலிக்கு தங்கம், அம்மா பரிசுப்பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 20 கிலோ அரிசி விலையின்றி வழங்கப்படுகிறது. 1,600 கோடி ரூபாய் மதிப்பில், அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X