பெருந்துறை: பெருந்துறை தாலுகா அலுவலகம், சமீபத்தில் கட்டப்பட்டது என்பதால், கழிவறை சுத்தமாக இருக்கும் என்றுதான் நினைப்பர். தாலுகா அலுவலக நுழைவு வாயிலில் நுழைந்தவுடன், வலதுபுறமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அவைகளின் வெளித்தோற்றம் நன்றாக இருப்பதை வைத்து, உள்ளே செல்பவர்கள் குடலை புரட்டி போடும் அளவுக்கு வாந்தியெடுத்தபடியே, ஓடி வரும் நிலையில் உள்ளது. கழிவறைக்குள் அசிங்கம், துர்நாற்றம் வீசுகிறது. எந்த பராமரிப்பும் இல்லை; நோய்கிருமிகளின் பிறப்பிடமே அங்குதான் உள்ளது. கழிவறையை சுத்தம் செய்ய, அதிகாரிகள் மனது வைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.