புகார் பெட்டி - சேலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : நவ 29, 2019

நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்: ஆத்தூர் வழியாக, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில், துலுக்கனூர், இந்திரா நகர் முதல், புதுப்பேட்டை, காமராஜர் சாலை, உடையார்பாளையம், விநாயகபுரம், நரசிங்கபுரம், செல்லியம்பாளையம் வரை, பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், சேதமடைந்த இடங்களில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலையை சீரமைக்க வேண்டும்.

- எஸ்.அண்ணாமலை, ஆத்தூர்.

மண் கொட்டி நிரவினால் விபத்தில்லை! தலைவாசல் - ஊனத்தூர் நெடுஞ்சாலையை, தினமும் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். அங்கு, சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், பக்கவாட்டில் மண் கொட்டி சரியாக நிரவப்படவில்லை. இதனால், நாவக்குறிச்சி, சிறுவாச்சூர் ஏரி உள்ளிட்ட இடங்களில், சாலை உயரமாகவும், மண் தரை தாழ்வாகவும் உள்ளது. கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள், மண் தரையில் இறங்கி, தார்ச் சாலையில் ஏறும்போது, டயர்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.

- வி.ஜோதிவேல், சிறுவாச்சூர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X