பொது செய்தி

தமிழ்நாடு

புறம்போக்கில் இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
சங்ககிரி: புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை கேட்டு, பொதுமக்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சங்ககிரி, கத்தேரி ஊராட்சி, உப்பு பள்ளத்தில், 9.23 ஏக்கர், பாறை புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு, கத்தேரி, புதுப்பாளையம், தேவூர், குமாரபாளையம், பகுதிகளைச் சேர்ந்த, 446 குடும்பத்தினருக்கு, தலா, மூன்று சென்ட் நிலம் வழங்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 200க்கும்

சங்ககிரி: புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை கேட்டு, பொதுமக்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்ககிரி, கத்தேரி ஊராட்சி, உப்பு பள்ளத்தில், 9.23 ஏக்கர், பாறை புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு, கத்தேரி, புதுப்பாளையம், தேவூர், குமாரபாளையம், பகுதிகளைச் சேர்ந்த, 446 குடும்பத்தினருக்கு, தலா, மூன்று சென்ட் நிலம் வழங்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். தொடர்ந்து, சாமியானா பந்தல் அமைத்து, வருவாய்த்துறையினர் வீட்டு மனை நிலம் வழங்கும் வரை, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி, நேற்று மதியம், 2:00 மணி வரை, அங்கேயே அமர்ந்திருந்தனர். சங்ககிரி ஆர்.டி.ஓ., அமிர்தலிங்கம், 'பாறை புறம்போக்கு என்பதால், மக்கள் வசிக்க முடியாத சூழல் உள்ளது. அதனால், அந்தந்த ஊராட்சி பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த தகுதியானவகளுக்கு, மனுக்கள் பெற்று, வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தார். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X