சங்ககிரி: புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை கேட்டு, பொதுமக்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்ககிரி, கத்தேரி ஊராட்சி, உப்பு பள்ளத்தில், 9.23 ஏக்கர், பாறை புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு, கத்தேரி, புதுப்பாளையம், தேவூர், குமாரபாளையம், பகுதிகளைச் சேர்ந்த, 446 குடும்பத்தினருக்கு, தலா, மூன்று சென்ட் நிலம் வழங்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். தொடர்ந்து, சாமியானா பந்தல் அமைத்து, வருவாய்த்துறையினர் வீட்டு மனை நிலம் வழங்கும் வரை, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி, நேற்று மதியம், 2:00 மணி வரை, அங்கேயே அமர்ந்திருந்தனர். சங்ககிரி ஆர்.டி.ஓ., அமிர்தலிங்கம், 'பாறை புறம்போக்கு என்பதால், மக்கள் வசிக்க முடியாத சூழல் உள்ளது. அதனால், அந்தந்த ஊராட்சி பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த தகுதியானவகளுக்கு, மனுக்கள் பெற்று, வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தார். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE