நாய்க்கடிக்கு ஆளாகி தினமும் 30 பேர்: அரசு மருத்துவமனைக்கு வரும் அவலம்

Added : நவ 29, 2019
Advertisement

ஓமலூர்: நாய்க்கடிக்கு ஆளாகி, தினமும், 30க்கும் மேற்பட்டோர், ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அதனால், நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, கிராமங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், நாய்க்கடி மருந்து இருப்பு வைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
ஓமலூரில், செவ்வாய் சந்தை, பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் வளாகம், கடைவீதி ஆகிய பகுதிகளில், தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அத்துடன், சிறுவர்கள் உள்பட அனைவரையும் துரத்துவதோடு, கடித்தும் விடுகின்றன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவியர், அச்சத்துடனே நடமாடும் அவலம் உள்ளது. மேலும், சில வாரமாக, நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, காடையாம்பட்டி, தாரமங்கலம், பாகல்பட்டி, தொளசம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி பகுதிகளிலிருந்து, பலர் நாய்க்கடிக்கு ஆளாகி, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இதற்கு, அந்தந்த பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், நாய்க்கடி மருந்து இருப்பு இல்லாததே காரணம். இதனால், ஓரிரு நாட்கள், 30 முதல், 40 பேர் வரை, அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வதால், சுகாதார நிலையங்களில், மருந்து இருப்பு வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கூறுகையில், 'பேரூராட்சி, ஊராட்சி பகுதியில், தெரு நாய்களின் எண்ணிக்கை மட்டுமின்றி, கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தள்ளது. நாய்களை கட்டுப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X