பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் நியமனம்

Added : நவ 29, 2019
Advertisement

ஓமலூர்: ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளுக்கு, உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பெயர் பட்டியலை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஓமலூரில், எட்டாவது வார்டுக்கு, சேலம் டிஆர்.டி.ஏ., உதவி திட்ட அலுவலர் பூமாலை, ஒன்பதாவது வார்டுக்கு, ஓமலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பிரகாஷ், 10வது வார்டுக்கு, ஓமலூர் வேளாண் அலுவலர் மதுமிதா, தாரமங்கலம், 11வது வார்டுக்கு, நங்கவள்ளி வேளாண் அலுவலர் கஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மேற்கண்ட நான்கு வார்டுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலராக, சேலம், மகளிர் திட்ட இயக்குனர் செல்வகுமார் நியமிக்கப்பட்டள்ளார். அதேபோல், காடையாம்பட்டியில், ஐந்தாவது வார்டுக்கு, காடையாம்பட்டி உதவி தோட்டக் கலைத்துறை அலுவலர் கோவிந்தராஜ், ஆறாவது வார்டுக்கு, சேலம் கலால் உதவி ஆணையர் அம்பரிநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மேற்கண்ட இரு வார்டுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலராக, சேலம், கால்நடை இணை இயக்குனர் புரு?ஷாத்தமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X